சகல உபகாரங்களையும் மறவாதே

சகல உபகாரங்களையும் மறவாதே

சகல உபகாரங்களையும் மறவாதே                                         லூக்கா : 17 : 16

குஷ்டரோகம் என்பது மிகவும் கொடிய நோய். 1981 வரை இதற்கு மருத்துவ தீர்வு இல்லை. நோயின் அறிகுறிகள் 4-8 ஆண்டுகளுக்கு பிறகே தெரியத் தொடங்கும். தோல் புண்கள், நரம்பு பாதிப்பு, கைகள் கோணுதல், உணர்ச்சி இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். நோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, "தீட்டு, தீட்டு" என்று கத்தியபடி நடமாட வேண்டும். லேவியராகமம் 13: 45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும். 46. அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது. சமுதாயத்தில் மட்டும் அல்ல தேவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டவர்கள் இந்த குஷ்டரோகிகள். II நாளாகமம் 26 : 20. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான். 21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; உசியா ராஜா கர்வம் கொண்டு, ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிய தூபம் காட்டும் பணியை தானே செய்ய முயன்றார். தலைமை ஆசாரியர் அசரியாவும் 80 ஆசாரியர்களும் அவரை தடுத்து, இது ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிய பணி என்று எச்சரித்தனர். ராஜா கோபம் கொண்டபோது, உடனடியாக அவரது நெற்றியில் குஷ்டரோகம் தோன்றியது. இது கர்த்தரால் வந்த தண்டனை. ஆசாரியர்கள் அவரை ஆலயத்திலிருந்து வெளியேற்றினர். அவரும் கர்த்தர் தன்னை தண்டித்தார் என்பதை உணர்ந்து விரைந்து வெளியேறினார். மிரியாளுக்கு ஏற்பட்ட தண்டனையே உசியாவுக்கும் கிடைத்தது. எண் : 12:10–16. கர்வம் கொண்டனர், குஷ்டரோகம் பிடித்தது. அதை போல இந்த குஷ்டரோகிகள் சுகம் பெற்றாலும் நன்றி செலுத்தாமல் கர்வம் கொண்ட ஆவிக்குரிய குஷ்டம் பிடித்தவர்களாக இருந்தனர். 

நன்றி உணர்வு  முக்கியம்

பத்து பேரும் உதவி கேட்டனர், ஆனால் ஒருவர் மட்டுமே நன்றி சொன்னார். நன்றியுணர்வு இல்லாவிட்டால், நாம் அகந்தையும் சுயநலமும் கொண்டவர்களாக மாறிவிடுவோம். எல்லாவற்றையும் நாமே சாதித்துவிட்டதாக நம்பத் தொடங்குவோம். "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற இயேசுவின் கேள்வி நன்றியின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. தேவனின் சித்தமே நாம் ஸ்தோத்திரம் சொல்லுவதே.  1 தெசலோனிக்கேயர் 5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.  துன்ப வேலையயும் நாம் நன்றி செலுத்த உபயோகபடுத்திகொள்ள வேண்டும். நாம் நம்மை காணும் விதமே நம்மை திருப்தியாக்குகிறது.  சங்கீதம் 119:71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.  ஒருவனுக்கு மாத்திரமே நன்றி உணர்வு இருந்தது. மற்றவர்கள் செய் நன்றி மறந்தனர். 

{ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. மற்ற அறங்களை நன்மைகளை கொல்வதற்கு சூழ்நிலை, சந்தர்ப்பம் என்று ஆயிரம் காரணங்களையும் சப்பைகட்டுகளையும் கூறலாம். ஆனால் செய்ந்நன்றி கொல்வதற்கு அப்படியெல்லாம் கூறமுடியாது. ஒருவேலை கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளபட மாட்டாது}

தேவ ராஜ்யம் முக்கியம்

எல்லோரும் உடல் சுகம் பெற்றனர் (καθαρίζω - katharizo - சுத்தம்). திரும்பி வந்தவன் மட்டும் இரட்சிப்பு பெற்றான் (σώζω - sozo - இரட்சிப்பு). இரட்சிப்பு என்பது பாவ மன்னிப்பு மற்றும் நித்திய ஜீவனைக் குறிக்கிறது.  மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். நம் நன்றி உணர்வே நம்மை தேவனிடம் சேர்க்கிறது. அவரின் கிரியைகளை நினைக்க செய்கிறது. அவர் ராஜ்யத்தை முக்கியத்துவபடுத்துகிறது. நன்றி செலுத்த நாம் திரும்பி பார்க்க வேண்டும். சங்கீதம் 103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. நாம் மறந்து போக கூடாது. உபாகமம் 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். உடல் சுகம் தற்காலிகமானது -  இரட்சிப்பு நித்தியமானது. மாற்கு 8:36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?  John Kralik -  ஒவ்வொரு நாளும் ஒரு நன்றிக் கடிதம் எழுதுவது. 

சங்கீதம் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

About the Author
Sujith S
Sujith S

Former Stock and General Accountant, equipped with semi-qualified CMA certification. Full Stack Python, Flutter Developer. Currently serving as a Catechist in CSI Tirunelveli Diocese, having completed theological studies.