கடவுள் சண்டை: எகிப்திய ரா வும் இஸ்ரவேல் யா வும்

கடவுள் சண்டை: எகிப்திய ரா வும் இஸ்ரவேல் யா வும்

( Fictional Imagination Must Needed )
அனைத்து இலக்கியங்களும் அது உருவான மக்களின் கலாச்சார பின்னணியை கொண்டிருக்கும். கிறிஸ்தவ இறை வேதமான வேதாகமமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பண்டைய இஸ்ரவேல் மக்கள் பல இறை கோட்பாடுகளை கொண்டிருந்த மக்களின் மத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அந்த பல இறை கோட்பாடுகள் பற்றிய கருத்துக்கள் அவர்களின் கலாச்சாரத்திலும் சார கலந்திருப்பதை காணலாம். எகிப்தில் அடிமையாக இருக்கும் போது அவர்களின் நம்பிக்கையிலும், காலச்சரத்திலும் எகிப்திய கலாச்சாரம், நம்பிக்கைகள் இருப்பதற்கான வாய்புகள் அதிகம்.

யாத்திராகமம் பத்தாம் அதிகாரத்தில் வாதைகளை பற்றிய செய்திகளை நாம் காணலாம். வெட்டுக்கிளி, இருள், முதற் பிள்ளைகளின் பலி போன்றவைகளை வாசிக்கலாம். இதை கூர்ந்து ஆராயும் போது இதற்கும் பண்டைய எகிப்திய நாகரிக இறை வழிபாட்டிற்கும் இணைப்புகள் இருப்பதை காணலாம்.
யாத்திராகமம் 1௦ ஆம் அதிகாரம் 10 வசனத்தில் மோசே மற்றும் ஆரோனுடன் பார்வோன் பேசிக்கொண்டு இருப்பதை அறியலாம். அதில் பார்வோன் இப்படி கூறுகிறான்

அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
இந்த வசனத்தை நாம் எபிரேய மொழியில் வாசித்தோம் என்றால் பொல்லாப்பு என்ற வார்த்தைக்கு ரா என்ற பதம் உபயோகப்படுத்த பட்டிருக்கும். ஆங்கிலத்தில் அதை Evil என்று மொழி பெயர்ப்பு செய்திருப்பார்கள். ரா என்பது எகிப்திய சூரிய கடவுளாகும்.
ரா என்பதை எதற்காக எகிப்தின் கடவுள் என எடுக்கலாம் என்று பார்த்தால் சில எபிரேய இலக்கியங்களே அதற்க்கு வழி வகை செய்து தருகிறது.
Midrash Shir ha-Shirim, commenting on Song 1:12
He [sc. Pharaoh] said to him, “I see through my astrology a star rising to meet you, and its name is Raʿa, and it is a sign of blood and killing.” (ed. Grünhut, p. 15a = ed. Wertheimer, p. 41).
எபிரேய மொழிபெயர்ப்பு நிபுணர் ராஷி என்பவர் இந்த பகுதியை காண்பித்து Evil எனபதை ரா எனும் சூரிய கடவுள் என்றும் கருதலாம் என்று விளக்கம் தருகிறார்
பார்வோனுடன் பேசும் இந்த உரையாடலில் பார்வோன் என்பவன் இஸ்ரவேலின் தேவனை வணங்க நிராகரிப்பதுடன் ரா என்னும் எகிப்திய கடவுள் அவர்களுக்கு முன்பாக இருப்பதாகவும் கூறுகிறான்.
சற்று தெளிவாக ஆங்கில மொழியில் நாம் இதை காணலாம்.
King James Bible :
And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
When we interchange Evil with Ra
And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for Ra is before you.
பார்வோன் இப்படி சவால் விடுவதினால் யாவே தேவனின் எகிப்திய கடவுளுக்கு எதிரான கோபம் அடுத்தடுத்த வாதைகளில் எதிரொலிக்கிறது. எட்டாம் வாதை வெட்டுக்கிளி வரும்போது அது பூமியெல்லாம் மூடி அந்தகாரபடுத்தியதை நாம் வாசிக்கலாம். அடுத்தபடியாக இருள் பின் கடைசி வாதை இரவின் பிடியிலே நடப்பதை நாம் விவிலியத்திலே வாசிக்கலாம்.
எகிப்திய காலச்சார பின்னணியை நாம் அறிந்து இந்த சம்பவங்களை நோக்கும் போது இஸ்ரவேலின் தேவன் எகிப்தியர்களுக்கு மட்டும் அல்ல எகிப்திய கடவுள்களுக்கு எதிராகவும் அந்த காலத்தில் சம்பவங்களை செய்திருக்கிறார்.
வெட்டுக்கிளி பற்றிய வாதை
10;15 ல் வாசிக்கும் போது வெட்டுக்கிளி பூமியை இருளாக்கியதை காணலாம். சூரிய கடவுளான ரா வின் கண்ணான சூரிய ஒளியை எகிப்திலிருந்து விரட்டிய காட்சியை எகிப்திலே அக்காலத்தில் அம்மக்கள் கண்டிருப்பர். ரா எனும் கடவுளை காட்ட எகிப்திய மக்கள் ஒரிசிஸ் கடவுளின் கண்ணை அடையாளமாக வைத்திருப்பார்கள். இந்த துன்பத்தின் போது பார்வோன் வந்து உங்கள் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று சொல்லியிருப்பதை காணலாம்.
இருள் எனும் வாதை
ஒன்பதாவது துன்பமாக இருளை பற்றி நாம் வாசிக்கிறோம். நாம் வெளிப்படையாகவே இது சூரியனுக்கு (ரா) எதிராக நடக்கும் ஒரு போர் எனபதை நாம் அறிந்திட முடியும். ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எகிப்திய இலக்கியங்களில் இதன் தாக்கம் காணப்படுகிறது என்பது… கி மு 2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட நேபர் – ரோகு தீர்க்கதரிசன வாக்கியங்களில் பின்வருபவன காணப்படுகிறது.
“The sun disc is covered. It will not shine, allowing people to see . . . No one knows when midday occurs, for his shadow cannot be distinguished.”
இதை போல ராமசேஸ் 2 ன் மகனான Setne Khamwas என்பவன் சிறந்த மந்திரவாதியாக இருந்தான். அவன் தனது குறிப்புகளில் சிறந்த மகத்தான மந்திரங்களின் மூலம் ராவின் கண்கள் அதாவது சூரியன் இருள் பட முடியும் என்று எழுதியுள்ளார். பெயர் தெரியாத ஒரு மந்திரவாதி எகிப்தை இருளாக்குவதை பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு


“One of them was talking in a loud voice and said among other things: ‘Were it not that Amun would find fault with me, and that the king of Egypt would punish me, I would cast my sorceries upon Egypt and would make the people of Egypt spend three days and three nights seeing no light, only darkness’.”


இப்போது நாம் 22,23 ஆம் வாசனங்களை வாசிப்போம் என்றால் அது நேரடியாக சூரிய கடவுள் ரா வுக்கு எதிரான போர் என்பதை அறியலாம்.


பத்தாம் வாதை
முதல் பிறப்பு இறத்தல் என்ற வாதை கடைசி துன்பமாக எகிப்திலே நிறைவேற்றபட்டிருக்கிறது. அதுவும் இரவிலே நிகழ்ந்திருப்பதை வாசிக்கலாம். இந்த முதற்பிறப்பு இறத்தல் என்ற நிகழ்வு எகிப்தியர்களுக்கு புதிதல்ல என்பது சற்று அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். எகிப்தில் உள்ள உனாஸ் மற்றும் டெட்டி எனும் பிரமேடுகளில் உள்ள எழுத்துக்களில் சிலரின் இறப்புகளின் பற்றிய தகவல்களில் ராஜாக்களின் முதல் பிறப்பு கடவுளால் வதம் செய்யபடுவதை பற்றி காணப்படுகிறது. அதன் குறிப்புகள்
pyramids of Unas, c. 2350 B.C.E., and Teti, c. 2320 B.C.E., both at Saqqara:
It is the king who will be judged with Him-whose-name-is-hidden on this day of the slaying of the first-born (smsw; lit. “eldest”).
அதுமட்டும் அல்லாமல் Saqqara, el-Barsha எனும் இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிக்களிளும் இந்த வதம் நிகழ்ந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
பத்தாம் வாதை எகிப்திய மக்களுக்கு அவர்கள் நம்பிக்கையிலே கடவுள் தீர்பளித்து இருப்பதை நாம் காணலாம். ஒன்பது துன்பங்களையும் அவர்கள் எதேர்ச்சையாக அல்லது பிற கடவுளின் தண்டனையாக நினைத்து கொண்டிருந்த எகிப்திய மக்களுக்கு பத்தாம் துன்பம் அவர்கள் கடவுளே அவர்களுக்கு எதிராக நிற்பது போல இருந்து விடுத்திருக்கலாம்.

என்ன இருந்தாலும் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் எவரையும் ஆண்டவர் விடுவிப்பார், எதிராக எப்பேர்ப்பட்ட ராஜ்யங்கள் வந்தாலும் சரி தெய்வங்கள் வந்தாலும் சரி..

About the Author
Sujith S
Sujith S

Former Stock and General Accountant, equipped with semi-qualified CMA certification. Full Stack Python, Flutter Developer. Currently serving as a Catechist in CSI Tirunelveli Diocese, having completed theological studies.