Church of South India History
தென்னிந்திய திருச்சபை - பாரம்பரியமும், சீர்திருத்தமும் இரண்டற கலந்த, பரமனின் நோக்கத்தை தனதாக்கி கொண்ட, உலகமெங்கும் இருக்கும் அனைத்து சபைகளுக்கும் ஒரு எடுத்துகாட்டாய் விளங்கும் ஒருமைபாட்டின் திருச்சபையாகும். எத்தனை புத்தகங்கள் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை வெளிக்கொணர முயற்சிகள் எடுத்துகொண்டாலும், தென்னிந்திய திருச்சபை வரலாறு தனக்கென்ற ஒரு தனித்துவத்தை காட்டிக்கொண்டே இருக்கும். வரலாற்று பேராசிரியர் அலெக்ஸ்சாண்டர் எழுதிய இப்புத்தகம் தென்னிந்திய திருச்சபையின் ஆதி உருவாக்கத்தை பற்றிய ஒரு விளக்கத்தையும், பல்வேறு சபை பிரிவுகள் எப்படி ஒன்றுபட்டன மற்றும் அவற்றின் வரலாறுகள் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. கிறிஸ்துவானவர் எப்படி தன் அவயங்களை ஒன்றிணைத்து தனது செயல்பாட்டினை இந்த உலகுக்கு வெளிபடுத்தினார் என்பதற்கு தென்னிந்திய திருச்சபையின் இந்த அரிய வரலாறு ஒரு சாட்சியே. இப்புத்தகத்தை வாசிப்போர் தென்னிந்திய திருச்சபையின் ஐக்கிய காலகட்டத்திற்கே சென்று திரும்புவர் என்பதற்கு ஐயமில்லை. ஆசிரியர் அலெக்ஸ்சாண்டர் ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியர் என்பதை தாண்டி தமிழில் தனது கருத்துக்களை சிறந்த முறையில் பாமரனுக்கும் வெளிபடுத்த வல்லவர் என்பதை இப்புத்தகத்தின் ஓட்டத்தில் உணரலாம். தென்னிந்திய திருச்சபைக்கு பிரச்சனைகள் புதிதல்ல என்பதை உணர்த்துவதோடு, வெறும் சபை என்ற நிலையை தாண்டி அன்பு, ஒருமைப்பாடு, பக்தி என்பதில் தென்னிந்திய திருச்சபை நிலைத்து நின்றது என்பதை விவரிக்கும் ஒரு அற்புதமான நூல் இந்நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் அனைவரிடமும் தூய ஆவியானவர் இடைபடுவாராக.
More Books by Sujith S

The Book common Prayer

Nargarunai Thiyanamalai

Reformation History
