Kiristhava Arasiyal
அரசியல், ஆட்சி, கட்சி என்றாலே பல கிறிஸ்தவ மக்களுக்கு பாவம் என்ற எண்ணமும், கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் ஏது சம்பந்தம் என்ற சிந்தனையும் தோன்றி விடுகிறது. கிறிஸ்துவானவரை உலகத்தின் அனைத்து காரியத்திற்கும் பொதுவாக வைத்து காணாமல் அவரை வெறும் ஆன்மீகத்திற்கும், தனி ஆத்துமத்திற்கும் மட்டுமே தேவன் என்ற நிலையை நாம் இக்கால கிறிஸ்தவத்தில் காணலாம்.
இதற்கு காரணம் கிறிஸ்தவத்தில் அரசியலின் தேவையும், இன்றியமையாததையும் கிறிஸ்தவ மக்கள் புரிந்து கொள்ளாமல் இறை வேதத்தை புரிந்துகொண்டதே. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த நாள் முதற்கொண்டு அவர் பரமேறின நாள் வரை தனது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் தன்னுடைய ஆட்சி, ஆளுகை பற்றிய பல குறிப்புகளை தன்னுடைய போதனை ஊழியத்தின் மூலமும், வெளிப்படையான கண்டனங்கள் மூலமும் வெளிப்படுத்தி உள்ளதை நாம் சுவிசேஷங்களில் வாசிக்கலாம்.
இறைமகன் இயேசு கிறிஸ்து நூறு சதவிகிதம் தேவன் நூறு சதவிகிதம் மனிதன் என்றே நம்முடைய திருச்சபை வேத சித்தாந்தங்கள் கற்பிக்கிறது. அப்படியிருக்க மனிதனாக இருக்கும் ஒவ்வொருவனும் ஆட்கொள்ளும் அரசியலும், பிற ஆளுகை முறைகளும் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இயேசு கிறிஸ்துவும், கிறிஸ்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
கிறிஸ்துவின் வாழ்வில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியல் உள்ளது. கொள்கைகள் உள்ளது. ஆன்மீக, ஆத்மீக காரியங்கள் இருப்பது போலவே, இவ்வுலகத்தில் வாழும் வழிமுறைகளும் உள்ளது. அதை கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பதும், அதை வாழ்வின் அறமாக ஏற்று வாழ்வதும் கடமை.
கிறிஸ்தவ அரசியல் எனும் இந்த சிறு நூலின் மூலம் நான் அறிந்த தெரிந்த புரிந்த சில கிறிஸ்தவ அரசியல் இறையியல், அறங்களை வெளிக்கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் பரமன் காட்டும் அரசியல் அறங்களில் பயணித்து சமூக, சமுதாய, பொருளாதார முற்போக்குவாதங்களை பின்பற்றுவோமானால் நிச்சயமாக பிற மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் வாழும் கிறிஸ்துவாக அறியப்படுவோம் என்பது இறைவாக்கு. இதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் தூய ஆவியானவர் வழிநடத்துவாராக.
More Books by Sujith S

The Book common Prayer

Nargarunai Thiyanamalai

Reformation History
