Visuvasa Bathilgal
இந்த சிறு புத்தகம் கிறிஸ்து சபையின் வேத உபதேசங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் பொருட்டு எழுதப்பட்டதல்ல. இதில் எழுதப்பட்டிருக்கும் தலைப்புகளில் எல்லா அம்சங்களைப்பற்றியும் இப்படி ஒரு சிறு புத்தக வடிவில் கொடுப்பது என்பது கூடாததொன்றாகும்.
ஆனாலும் இதிலே கூறப்பட்டுள்ள ஞானஸ்நானம், கிறிஸ்தவ ஓய்வு நாள், பிறமொழி பேசுதல் முதலியவைகளைப் பற்றிய நம் திருச்சபை உபதேசங்கள், நம் வேத புத்தகத்தை அனுசரித்தே அமைந்தது என்பதை எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கமாகும்.
வேத அறிவை ஆழமாக அறியாத நம் திருச்சபை மக்கள், குழந்தை ஞானஸ்நானம் சரியா, வயது வந்தவுடன் எடுக்கும் ஞானஸ்நானம் சரியா, தெளித்தோ அல்லது மூழ்கியோ ஞானஸ்நானம் எடுப்பது சரியா என்று முழுதுமாக அறிந்து கொள்ளாமல் தடுமாறுகிறார்கள்.
யெகோவா சாட்சிகள், ஏழாம் நாள் அத்வெந்து மிஷன்காரர் இவர்களுடைய உபதேசங்கள், புதிய ஏற்பாட்டில் தெளிவாய்க் கூறப்பட்டுள்ள தேவ சத்தியங்களுக்கு எதிரானது என்று நிரூபிக்க பலரால் முடியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே கூறியுள்ள சத்தியங்களைக் குறித்து பெரும்பாலும் அறிந்து கொள்வதற்கும், தவறான உபதேசங்களுடைய வலையில் அகப்பட்டு அலைக்கழிக்கப்படாமல் திருச்சபையில் ஊன்றி நின்று உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவதற்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
இந்த புத்தகம் ஒம்மன் எழுதிய தடுமாற்றத்திற்கு தக்க விடை எனும் புத்தகத்தை தழுவி எழுதியதே. தற்காலத்திற்கேற்ப சில புதிய காரியங்களையும் சேர்த்துள்ளேன். இதை வெளியிடும் கிறிஸ்தவ வரலாற்று சங்கத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
More Books by Sujith S

The Book common Prayer

Nargarunai Thiyanamalai

Reformation History
